வரலாற்றைத் திரித்து, அரசியல் சமரசத்தை நியாயப்படுத்த முயல்வது துரோகம்
"வரலாறு என்பது புனைவு அல்ல. அது ரத்தத்தால் எழுதப்பட்ட உண்மை. அதைத் திரித்து, சமரசத்துக்கு வழிவகுக்க முயல்வது, தியாகிகளுக்கு செய்யும் மாபெரும் அநீதி."
வரலாறு என்பது ஆய்ந்து அறிதல். அது இணையவழி உரையாடல்களினால் உருவாகும் திரிபுவாதம் அல்ல.
@Whisperer2024 அவர்கள் தமிழ்த் தேசிய அரசியல் விவாதத்தில் ஒரு தவறான ஒப்பீட்டை முன்வைத்துள்ளார். பழைய படங்களை (ENLF, Thimpu காலம்) காட்டி, "அப்போதும் எதிரிகளாக இருந்தவர்கள் தற்காலிகமாக ஒன்றிணைந்தனர்" என்று சொல்லி, இன்று சீமான் உதயநிதியை சந்திப்பதை அதே வகையான ஒப்பீட்டில் வைக்க முயல்கிறார்.
இது வரலாற்றைத் திரித்து எழுதும் முயற்சி.
திம்புப் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் தமிழ் இயக்கங்கள் "தற்காலிகமாக" ஒன்றிணைந்தன என்பது உண்மை. ஆனால் அந்த ஒற்றுமை தமிழர் பக்கம் நின்று, இலங்கை அரசுக்கு எதிராக இருந்தது. அது தமிழ் மக்களின் உரிமைக்கான கூட்டணி. அந்தக் காலத்தில் அவர்கள் அனைவரும் தமிழீழம் அல்லது தமிழர் தாயகம் என்ற கோரிக்கையுடனேயே முன்னேறினர்.
ஆனால் இன்று சீமான்-உதயநிதி சந்திப்பு என்பது தமிழ்த் தேசிய இயக்கம், இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்த திமுக DMK கட்சியுடன் நெருக்கம் காட்டும் நிகழ்வு. இவை இரண்டும் ஒன்றல்ல.
வரலாற்றை கற்பனை வடிவில் திரித்து, அதை உண்மை என்று நிலைநிறுத்த முயல்வது ஆபத்தான போக்கு.
✍️ முள்ளிவாய்க்காலில் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்தது. ஆனால் அவர்களின் அரசியல் சித்தாந்தமும், தமிழீழ இலட்சியமும், வரலாற்றாளர்களும் இன்றும் அதே இலட்சியத்துடன் தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.
தமிழ்த் தேசிய அரசியல் என்பது அதிகார அரசியல் அல்ல. அது கொள்கை அரசியல். அதில் சமரசம் அவசியமானாலும், அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுத்து வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகள் துரோகமாகவே பார்க்கப்படும்.
முகமோ முகவரியோ காட்டாத அநாமதேய நபர்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. ஆனால் முக்காடு போட்டுக்கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சீண்டும் மனிதர்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை, விரும்பியோ விரும்பாமலோ உருவாகிறது. அது வேதனையான ஒன்றே.
💥 ஈழத் தமிழ் மக்களின் அரசியல் என்பது உரிமை மீட்புப் போராட்டம், தேசிய விடுதலைப் போராட்டம். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் என்பது நீர்த்துப்போன சித்தாந்தம், சினிமா கோமாளிகளின் கொல்லிபுற அரசியல். இதில் சீமான், விஜய், உதயநிதி உள்ளிட்டோர் செய்யும் அரசியல் நவீன இலுமினாட்டி அரசியல். அந்த சாக்கடை அரசியலை உயர்ந்த தியாகத்தால் உருவான இலட்சியப் போராட்டத்துடன் ஒப்பிடுவதே அருவெறுக்கத்தக்க ஒப்பீடு.
சங்கம் போன்ற ஆங்கில இணையங்களில் வரும் செய்திகளோ, கட்டுரையாளர்களின் கருத்துகளோ அன்றைய கள யதார்த்தத்துக்கு ஏற்ப எழுதப்பட்டவை. அவற்றை இன்று கொண்டு வந்து சமரசத்தை நியாயப்படுத்துவது, அநாமதேய அரசியலை நிலைநிறுத்தும் அற்ப முயற்சி மட்டுமே.
வரலாறு என்பது ஆய்ந்து அறிதல். அது இணையவழி உரையாடல்களினால் உருவாகும் திரிபுவாதம் அல்ல.
வரலாறு என்பது ரத்தத்தால் எழுதப்பட்ட உண்மை. அதைத் திரித்து, சமரசத்துக்கு வழிவகுக்க முயல்வது, தியாகிகளுக்கு செய்யும் மாபெரும் அநீதி.
அவை காத்திருக்கின்றன — சரியான நேரத்துக்காக.
0 Comments