முள்ளிவாய்க்கால் மே 17: அணையாத பேரொளியும், அழியாத கனவும்!

மே 17, 2009 — முள்ளிவாய்க்கால்: தமிழீழத்தின் உயிர்நாடி வீரச்சாவடைந்த நாள்

✍ கிருஸ்ணா அம்பலவாணர் | 🕯 மே 17 நினைவேந்தல்

மே 17, 2009. முள்ளிவாய்க்கால் புதுமாத்தளன். அன்று தமிழீழத்தின் வரலாற்றில் ஒரு மாபெரும் இதயம் நின்றது. தமிழ் மக்களின் கனவுகளையும், உரிமைகளையும், சுயநிர்ணயத்தின் தீயையும் தன் உயிரில் சுமந்து வந்த மாபெரும் வியாகப விருட்சம், தமிழ்கூறும் நல்லுலகு போற்றும் பேரண்டப்பெருநெருப்பு, மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், வீரச்சாவடைந்தார்.

அவர் ஒரு தனி மனிதர் அல்ல. அவர் தமிழ் தேசத்தின் உருவகம். அவர் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் குரல். அவர் தமிழர்களின் தலைவிதியை மாற்ற எழுந்த ஒரு புரட்சியின் சின்னம்.

"நாங்கள் அடிமைகளாக வாழ மாட்டோம். சுதந்திரமாக வாழ்வோம் அல்லது வீரமரணம் அடைவோம்."

அவர் தலைமையில் தமிழ் மக்கள் உலகுக்கு ஒரு செய்தியைச் சொன்னார்கள் "நாங்கள் அடிமைகளாக வாழ மாட்டோம். சுதந்திரமாக வாழ்வோம் அல்லது வீரமரணம் அடைவோம்." அந்தச் செய்தி இன்றும் உலகின் மூலைகளில் எதிரொலிக்கிறது. அவர் தமிழ் இளைஞர்களுக்கு புதிய கனவைத் தந்தார். அவர் பெண்களுக்கு போர்க்களத்தில் சமத்துவத்தைத் தந்தார். அவர் தமிழ் மக்களுக்கு "நாம் ஒரு தேசம்" என்ற உணர்வைத் தந்தார்.

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்

அவரின் வீரச்சாவு தமிழினத்தின் உடலைத் தாக்கியது. ஆனால் அவரின் தியாகம் தமிழினத்தின் ஆன்மாவைத் தொடவில்லை. அது இன்றும் உயிருடன் எரிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தமிழ் இளைஞனின் இதயத்திலும், ஒவ்வொரு தாயின் கண்ணீரிலும், ஒவ்வொரு போராளியின் நினைவிலும் அவர் இன்னும் உயிருடன் நடமாடுகிறார்.

17 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

ஆனால் அந்த மாமனிதரின் பாதை இன்னும் நம்மை அழைத்துக் கொண்டிருக்கிறது.

அவரின் கனவு இன்னும் நிறைவேறவில்லை.

அவரின் தியாகம் இன்னும் நீதியைத் தேடிக் கொண்டிருக்கிறது.

✦   ✦   ✦

முள்ளிவாய்க்கால் அவரைப் பறித்துக்கொண்டது.

ஆனால் அவரை மறக்க முடியவில்லை.

அவர் தமிழ் தேசத்தின் வரலாற்றில் என்றும் அழியாத ஒரு நட்சத்திரமாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.

இன்று மே 17.

நாம் அவரை நினைக்கும் ஒவ்வொரு தருணமும்,

நமக்குள் ஒரு குரல் எழுகிறது:

அண்ணே!;

எங்கள் உயிரினும் மேலான "தலைவர் அவர்களே... உங்கள் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம்."

✦   ✦   ✦

அந்த உறுதியுடன்,

அந்த வலியுடன்,

அந்த நம்பிக்கையுடன்,

நாம் தொடர்ந்து பயணிப்போம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு
என்றும் அஞ்சலி.
என்றும் உயிர்.

கி
கிருஸ்ணா அம்பலவாணர்
மே 17 நினைவேந்தல் கட்டுரை
🕯 மே 17 · தமிழீழத் தேசியத் தலைவர் நினைவு தினம் · என்றும் அஞ்சலி · என்றும் உயிர்

Post a Comment

0 Comments