ஆசனப் பிச்சைகளும் ஆரத்திச் சடங்குகளும்!

அரசியல் விமர்சனம்

ஆசனப் பிச்சைகளும் ஆரத்திச் சடங்குகளும்!

பழநிபாரதியின் வரிகள் உணர்த்தும் பொருள்முதல்வாத யதார்த்தம்!

✍ கிருஸ்ணா அம்பலவாணர்|📅 அக்டோபர் 2026

"ஒரு போலி அரசியல்வாதிக்கு ஆரத்தி எடுப்பது... தட்டேந்திப் பிழைப்பதற்கு உங்களை நீங்களே தயார்படுத்திக்கொள்வது" என்று கவிஞர் பழநிபாரதி விடுத்துள்ள தார்மீகப் பிரகடனம், சமகால ஈழத் தமிழ் அரசியல் களம் சந்தித்து வரும் ஆகப்பாரிய சித்தாந்த வறுமையை அக்குவேறாகத் தோலுரித்துக் காட்டும் ஒரு மிக முக்கிய மெய்யியல் ஆயுதமாகும்.

நல்லூர் முன்றலில் தியாக தீபம் திலீபனின் வெண்கலச் சிலை சிறிலங்கா பேரினவாத அநுர அரசால் நள்ளிரவில் திருடப்பட்ட துரோகம் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க, மறுபுறம் எமது நிலத்தின் போலித் தலைமைகளும், யாழ் மண்ணிற்குள் "கண்டியன் நடனம்" ஆடி எமது இளைய தலைமுறையை அரசியல் நீக்கம் செய்யத் துடிக்கும் பாசிசக் கும்பல்களும் எமது மக்களைச் சடங்குவாதங்களுக்குள் முடக்க முயல்வதன் அசல் பின்னணியை இவ்வரிகள் அம்பலப்படுத்துகின்றன.

பழநிபாரதி சுட்டிக்காட்டும் 'ஆரத்திச் சடங்கு' என்பது வெறும் கலாச்சார நிகழ்வு அல்ல; அது ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் சுயசார்பான அரசியல் உணர்வை மழுங்கடிக்கும் கருத்துமுதல்வாதப் பொறியாகும். தேர்தல் மேடைகளில் "பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவோம்" என்று நாடகமாடிவிட்டு, களத்தில் அதே PTA/PSTA சட்டங்களைக் காட்டி எமது நிலத்து தமிழ் இளையோரை "பிணையின்றிச் சிறையிலடைப்போம்" என மிரட்டும் அருளாநந்தம் அருண் சித்தார்த் போன்ற நக்கிப்பிழைக்கும் பாசிசக் கைக்கூலிகளுக்கும், எமது தியாக வரலாற்றைத் தேர்தல் சந்தைப் பண்டமாக மாற்றும் சுமந்திரன், கஜேந்திரகுமார் போன்ற மிதவாதத் தலைமைகளுக்கும் பின்னால் எமது சமூகம் சலங்கை கட்டி ஆடும் வரை எமது விடுதலைப் பாதைக்கு விடிவில்லை.

நல்லூர் — தியாக தீபம் திலீபன் நினைவிடம்
நல்லூர் முன்றல் — தியாக தீபம் திலீபனின் நினைவு அழியாது

போலி அரசியல்வாதிகளுக்கு நாம் எடுக்கும் ஒவ்வொரு தார்மீக ஆரத்தியும், எமது பூர்விக நில இறையாண்மையைக் கொழும்பு ஆட்சியாளர்களிடம் அடகு வைத்துவிட்டு நாடாளுமன்ற ஆசனப் பிச்சைகளுக்காகத் 'தட்டேந்திப் பிழைக்கும்' அடிமைத்தனத்திற்கே எங்களை இட்டுச் செல்லும்.

எமக்கான இராஜதந்திரப் போராட்டம் என்பது இத்தகைய சடங்குசார் கருத்துமுதல்வாதக் கூச்சல்களால் வெல்லப்படக் கூடியதல்ல. எமது பிரச்சினைகளைக் கொள்கை ரீதியாக இனிவரும் காலங்களில் எவ்விதத் தேர்தல் சார்புமற்ற குடிசார் சமூகமே (Civil Society) முழுமையாகக் கையாள வேண்டும். சடங்குவாதங்களின் திரைகளையும், இந்த நக்கிப்பிழைக்கும் போலித் தலைமைகளின் முகமூடிகளையும் கிழித்தெறிந்துவிட்டு, தலைவர் பிரபாகரன் காட்டிய அதே சமரசமற்ற பொருள்முதல்வாத (Materialism) இராஜதந்திர வீரியத்தோடும், தூய்மையான சித்தாந்தத் தெளிவோடும் எமது இளைய தலைமுறை ஒற்றைக் குடையின் கீழ் திரள வேண்டும். போலி அரசியல்வாதிகளின் தட்டேந்தும் சாக்கடையில் இருந்து எமது கூட்டு நினைவாற்றலை (Collective Memory) விடுவித்து, கொள்கைசார் குடிசார் சமூகத்தின் கைகளில் எமது பாதையை ஒப்படைப்பதே எமது மண்ணின் இறையாண்மையைக் காப்பதற்கான ஒரே தத்துவார்த்தப் பாதையாகும்!

கி
கிருஸ்ணா அம்பலவாணர்
ஈழத்தமிழன் | திராவிடத் தமிழ்த்தேசிய சிந்தனையாளன்
⚠️ தமிழ் விடுதலைக்கான ஆயுதம் · வயிற்றுப் பிழைப்பன்று · அரசியல் தரம் காக்கப்பட வேண்டும்

Post a Comment

0 Comments